ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை - முகாமில் மீனவ குடும்பங்கள் தங்கவைப்பு

2 months ago 13

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் அதிகப்பட்சமாக 43.8 செ.மீ மழை பதிவானது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

Read Entire Article