ராமநாதபுரம் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

3 months ago 26

ராமநாதபுரம், அக். 4: ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சேதுபதி மன்னர்களின் குல தெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியபட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். மைசூர் அரண்மனைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சிறப்பாக நவராத்திரி திருவிழா நடைபெறுவது இக்கோயிலில்தான்.
நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகத்துடன் தொடங்கியது. இரவு கொலு பொம்மைகள் வைத்தல் மற்றும் பூஜை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது.

முதல் நாள் விழாவாக நேற்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரும் நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பத்தாம் நாள் திருவிழாவாக வரும் 12ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் புறப்பாடாகி, கேணிக்கரை மகர்நோன்பு திடலில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் தினமும் இரவு அரண்மனை வளாகத்தில் கலைநிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவுக பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

The post ராமநாதபுரம் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article