ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும்; டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்

11 hours ago 1

சென்னை,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணுவ வீரர்களுடன் நாம் துணை நிற்க வேண்டும் என்று டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது,

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நமக்காக எல்லையில் நமது ராணுவ வீரர்கள் சண்டை செய்துகொண்டிருக்கின்றனர். நமக்காக இந்திய ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாம் முப்படை ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும்' என்றார்.

Read Entire Article