
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மஹிபால் சிங் (55), அவரது மனைவி கீதா தேவி (50) மற்றும் அவர்களது மகன் லலித் (30). இவர்கள் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கார் மும்பை-டெல்லி செல்லும் நெடுஞ்சாலை தவுசாவில் உள்ள பந்தரேஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் கார் ஒரு லாரி மீது மோதி பின்னர் எதிர்பாராதவிதமாக சாலை பிரிப்பானில் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் லலித்தின் மனைவி பூஜா மட்டும் காயங்களுடன் உயிர்த்தப்பினார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்தில் காயமடைந்த பூஜாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.