ஜெய்ப்பூர்,
பஞ்சாப் மாநிலம் ஹொசீர்பூரை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டம் பனு எல்லையில் இவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பணியில் இருந்த கிருஷ்ண குமார் நேற்று இரவு தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு விரைந்து வந்த சக வீரர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ண குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், கிருஷ்ண குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, எல்லை பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.