பள்ளி மாணவரை காதலில் வீழ்த்தி கடத்தி சென்ற 2 குழந்தைகளின் தாய்

2 hours ago 1

சென்னை,

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். பள்ளி மாணவரை காதலில் வீழ்த்தி திருமணமான இளம்பெண் ஒருவர்  கடத்தி சென்ற சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையம் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான 2 குழந்தைகளுக்கும் தாயான வினோதினி (வயது 28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவர் ஆரம்பத்தில் வினோதினியை அக்கா..அக்கா.. என்று அழைத்து  பேசி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் மாணவர் மீது வினோதினிக்கு விபரீத ஆசை ஏற்பட்டது. தனக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பதையும் மறந்து மாணவரை தனது காதல் ஆசை வார்த்தைகளில் வீழ்த்தினார். இதனால் மாணவருடனான நெருக்கம் அதிகரித்தது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கதினருக்கும் அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய வினோதினியும் மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் மாணவரின் பெற்றோர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் மாணவருடன் நெருக்கமாக பழகிய வினோதினியும் மாயமாகி போனது தெரியவந்தது.

இதன்பின்னரே வினோதினி மாணவரை தனது காதல் வலையில் வீழ்த்தி கடத்தி சென்று இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் கல்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று மாணவரை மீட்டனர். மேலும் வினோதினியை போக்சோ சட்டத்தை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவரை திருமணமான இளம்பெண் ஒருவர் கடத்தி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article