குடியரசு தினவிழா: பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை

2 hours ago 1

சென்னை,

நாடுமுழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில், குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ். தலைமையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, விடுதிகளில் தங்குபவர்கள், சந்தேக நபர்கள் தணிக்கை, ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேக வாகனங்கள், உயர் பாதுகாப்பிற்குரிய இடங்கள், கட்டிடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்து பணி செய்து பாதுகாப்பை பலப்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் பிரிவு போலீசார் மூலம் Anti Sabotage Check வெடிபொருள் கண்டறிதல், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article