
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் இன்று அதிகாலை ஒரு ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தீ வேகமாக பரவியதால், பலர் ஓட்டலுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. முதற்கட்ட தகவலின்படி, ஓட்டலில் இருந்து வெளிவந்த தீப்பொறிகளை பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் தீ கட்டிடமுழுவதும் மளமளவென பரவி விட்டது.சம்பவ இடத்தில் வந்த உயர்மட்ட அதிகாரிகள், ஓட்டலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டல் அருகிலுள்ள கட்டிடங்களை காலிசெய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.