தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் - செங்கோட்டையன் பேச்சு

5 hours ago 4

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஆசனூரில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

நான் தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புகிறேன். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றுகிறேன். இந்த இயக்கம் மண்ணிலே வளர வேண்டும். இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும். திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. நான் அமைச்சராக பணியாற்றிய துறைகளில் நான் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் நிலவுவதாக பேசப்பட்டு வந்த நிலையில், செங்கோட்டையன் பேச்சுகள் அரசியலில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் செங்கோட்டையனின் பேச்சு அ.தி.மு.க-விலும் அரசியல் களத்திலும் கவனம் பெற்றுள்ளது.

Read Entire Article