ராஜபாளையம், ஜன.26: ராஜபாளையம் 18வது வார்டு பகுதியில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது. அப்போது, சமீபத்தில் சுவர் இடிந்து காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும் அப்பகுதியில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், சுகாதார பணியாளர்கள் பணிகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து தேவையில்லாத இடங்களில் குப்பைகளை கொட்டாமல் தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வில் சுகாதார அதிகாரி சக்திவேல், சுகாதார ஆய்வாளர் காஜா, பிட்டர் ராஜ்குமார்,பொறியாளர் பிரிவைச் சார்ந்த சரவணன், வார்டு செயலாளர் சுரேஷ் குமார், திமுக நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ராஜபாளையம் வார்டுகளில் கள ஆய்வு appeared first on Dinakaran.