ராஜபாளையம் அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - சிக்கியவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

2 months ago 13

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணைக்கு செல்லும் ஆற்றில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அனைவரும் உடனடியாக கரையேறிய நிலையில், 2 நபர்கள் மறுகரையில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துக் கொண்டே சென்றதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சீறிப்பாய்ந்து கொண்டிருந்த ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மறுகரைக்கு சென்று, அங்கு சிக்கியிருந்த 2 நபர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Read Entire Article