ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இவர் 5 நிமிடங்கள் திரையில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.