ராஜபாளையத்தில் திறப்பு; இந்தியாவின் முதல் காமிக்ஸ் நூலகம்

1 month ago 3

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் காமிக்ஸ் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நூலகத்தை திறந்து வைப்பதாக இருந்தது. அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், நூலகத்திற்கு வந்திருந்த சிறுவர்கள் திறந்து வைத்தனர். இது இந்தியாவின் முதல் காமிக்ஸ் நூலகம் ஆகும்.

இதுகுறித்து நூலகர் முத்துலெட்சுமி கூறுகையில், ‘‘இங்கு குழந்தைகளை கவரும் வகையில் வண்ண படங்களுடன் கூடிய காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்குப் பிடித்த பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தொடர்பான கதைகளை நூலகத்திற்கு வந்து படித்து மகிழலாம். குழந்தைகள் வண்ணம் தீட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தாங்கள் வண்ணம் தீட்டிய படங்கள் தொடர்பான கதைகளை அவர்களே கற்பனை செய்து கூறலாம்.

குழந்தைகள் அமருவதற்காக சிறிய அளவிலான சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் படுத்துக் கொண்டே கதை படிப்பதற்காக சிறிய அளவிலான தலையணைகளுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டரில் டிஜிட்டல் வடிவிலும் புத்தகங்களை படிக்கலாம். புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதற்காக வைஃபை வசதியும் உள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6.30 வரையும் நூலகம் செயல்படும்’’ என்றார்.

The post ராஜபாளையத்தில் திறப்பு; இந்தியாவின் முதல் காமிக்ஸ் நூலகம் appeared first on Dinakaran.

Read Entire Article