ராகுல் காந்தி நாளை அகமதாபாத் பயணம்

4 hours ago 1

அகமதாபாத்,

2027-ம் ஆண்டு குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மையப்படுத்தி காங்கிரஸ் எம்.பி.,யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அகமதாபாத்தில் உள்ள கட்சித் தலைவர்கள்,தொண்டர்களை நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து உரையாட உள்ளார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2நாள் பயணமாக ராகுல் காந்தி அகமதாபாத் வருகிறார். நாளை காலை (வெள்ளிக்கிழமை) முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார். மாலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரசின் மாவட்ட மற்றும் நகரத் தலைவர்களைச் சந்திப்பார்.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை உள்ளாட்சித் தலைவர்களுடன் அவர் உரையாடுவார். நாளை மறுநாள் தொண்டர்களிடேயே உரையாற்றும் ராகுல் காந்தி அன்றிரவு டெல்லிக்குச் செல்வார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களை வென்றது. ஆனால் 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த பிறகு, அவையில் கட்சியின் பலம் 12 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article