பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் (ஏஎல்பி): மொத்த காலியிடங்கள்: 9,970.
மண்டலம் வாரியாக காலியிடங்கள் விவரம்:
மத்திய ரயில்வே- 376, கிழக்கு மத்திய ரயில்வே-700, கிழக்கு கடற்கரை ரயில்வே-1461, கிழக்கு ரயில்வே-768, வடக்கு மத்திய ரயில்வே-508, வடகிழக்கு ரயில்வே-100, வடகிழக்கு எல்லை ரயில்வே-125, வடக்கு ரயில்வே-521, வடமேற்கு ரயில்வே-679, தென்மத்திய ரயில்வே-989, தென்கிழக்கு மத்திய ரயில்வே-568, தென்கிழக்கு ரயில்வே-796, தென்னக ரயில்வே-510, மேற்கு மத்திய ரயில்வே-759, மேற்கு ரயில்வே-885, மெட்ரோ ரயில்வே கொல்கத்தா-225.
சம்பளம்: ரூ.19,900.
வயது: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 18 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/
எஸ்டி/ஒபிசியினருக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேரச்சி பெற்று பிட்டர்/எலக்ட்ரீசியன்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ மில்ரைட்/ மெயின் டெனன்ஸ் மெக்கானிக்/ எலக்ட்ரானிக்ஸ்/ ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக்/வயர்மேன்/டர்னர்/மிஷினிஸ்ட்/ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சிபிடி எனப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, ஆன்லைன் வழி அப்டிடியூட் டெஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் மேத்ஸ்/மென்டல் ஏபிலிட்டி/பொது அறிவியல்/ பொது அறிவு உள்ளிட்ட பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 10ம் வகுப்பு தரத்தில் இருக்கும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் கேட்கப்படும். இதில் ஏதாவதொரு மொழியை தேர்வு செய்து தேர்வை எழுதலாம்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர்/ திருநங்கைகளுக்கு ரூ.250/-.
www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.05.2025.
The post ரயில்வேயில் 9970 அசிஸ்டென்ட் லோகோ பைலட்டுகள் appeared first on Dinakaran.