ரன் அவுட் சர்ச்சை: நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்

12 hours ago 3

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன்களும், பட்லர் 64 ரன்களும், சாய் சுதர்சன் 48 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 225 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் குஜராத் 38 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா 74 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 76 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். பட்லர் அடித்த பந்தை பீல்டர் பிடித்து விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசெனிடம் வீசினார்.

கிளாசென் பந்தை பிடிக்காமல் அப்படியே ஸ்டம்புக்கு திருப்பியபோது, பந்து முதலில் ஸ்டம்பில் பட்டதா? அல்லது அவரது கையுறை ஸ்டம்பு மீது முதலில் பட்டதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனை பல கோணங்களில் ஆராய்ந்த 3-வது நடுவர் அவுட் வழங்கினார்.

இதனால் சுப்மன் கில் அதிருப்தியுடன் வெளியேறினார். அத்துடன் பெவிலியன் திரும்பிய சுப்மன் கில் பவுண்டரிக்கு வெளியே நின்று கொண்டிருந்த நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Read Entire Article