ரத்த அழுத்தமானியை ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மருத்துவர் சாமுவேல் சீக்ப்ரிட் கார்ல் ரிட்டர் வான் பாஸ்ச் 1881ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். சிபியோன் ரிவா-ரோக்கி 1896இல் மிகவும் எளிதாகப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானியினை அறிமுகப்படுத்தினார். 1901ஆம் ஆண்டில், முன்னோடி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் கார்வி குசிங், ரிவா-ரோச்சியின் ரத்த அழுத்தமானியினை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து, நவீனமயமாக்கி, மருத்துவச் சமூகத்தில் பிரபலப்படுத்தினார்.
1905ஆம் ஆண்டில் ரஷ்ய மருத்துவர் நிகோலாய் கொரோட்கோவ் ‘‘கொரோட்காஃப் ஒலிகள்” கண்டு பிடித்ததைத் தொடர்ந்து இதயவிரிவு அழுத்தத்தினை ரத்த அழுத்த அளவீட்டுடன் சேர்த்தபோது மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. வில்லியம் ஏ.பாம் 1916இல் பாமனோமீட்டர் வகையினை கண்டுபிடித்தார். ஒரு ஊதப்பட்ட சுற்றுப்பட்டை, ஒரு அளவிடும் அலகு (மெர்குரி மானோமீட்டர் அல்லது அனரோயிட் அளவி) மற்றும் ஊதலுக்கான ஒரு பொறிமுறையானது கைமுறையாக இயக்கப்படும் குமிழ் மற்றும் அடைப்பிதழ் அல்லது மின்சாரத்தில் இயக்கப்படும் கருவி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ரத்த அழுத்தமானியில் ஒரு குமிழ்க்குழாய் உடன் இணைந்த வெப்பநிலைமானி ஒன்றும் காணப்படுகின்றது. இந்தக்குமிழை அழுத்தும்போது பாதரசம் உந்தப்படுகின்றது. ஒரு அளவி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை ஒரு பாதை காட்டுகிறது. இந்த அழுத்தமானி பாதரசத்தினைக்கொண்டு இருக்கும். இதனுடன் இணைந்த இதயத்துடிப்புமானி மூலம் ரத்த அழுத்தம் கண்டறியப்படுகிறது. பல்வேறு வகையான ரத்த அழுத்தமானிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. துல்லியம் மற்றும் வசதி ஆகியவற்றில் இவை வேறுபடுகின்றன.
The post ரத்த அழுத்தமானி (Sphygmomanometer) appeared first on Dinakaran.