பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 98 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 34வது லீக் போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால் 20 ஓவர்கள் கொண்ட போட்டி 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. மழை நின்ற பிறகு 2 மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை துவங்கிய பெங்களூரு அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.
இறுதியாக 14 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டை இழந்து 95 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்னும், ரஜத் பட்டிதார் 18 பந்தில் 23 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப், மார்க்கோ, சாகல், ஹர்பிரீத் தலா 2 விக்கெட், பர்ட்லெட் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 96 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை துவங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக வதேரா 33 ரன் அடித்து பஞ்சாப் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. பெங்களூரு பந்து வீச்சில் ஹேசில்வுட் 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
The post ஐபிஎல் 34வது லீக் போட்டி பஞ்சாப் அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.