ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோத வருகிறதா ஜீவாவின் 'பிளாக்'?

4 months ago 33

சென்னை,

இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் 'பிளாக்'. இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை வெளியாகாதநிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 10-ம் தேதி பிளாக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதே நாளில்தான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' படம் வெளியாகிறது.

சூர்யாவின் 'கங்குவா', 'வேட்டையன்' படத்துடன் மோதாமல் ரிலீஸ் தேதியை மாற்றியநிலையில் ஜீவாவின் 'பிளாக்' மோத இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரஜினியின் 170-வது படமாக உருவாகியுள்ள படம் வேட்டையன். ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Read Entire Article