ஒசாகா திரைப்பட விழா: அஜித்திற்கு சிறந்த நடிகருக்கான விருது...எந்த படத்திற்கு தெரியுமா!

23 hours ago 5

சென்னை,

தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் மற்றும் தமிழ் படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் விதமாக ஒசாகா தமிழ் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான ஒசாகா விருதிற்கான பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் அஜித்திற்கு துணிவு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்யின் லியோ படத்திற்கு 6 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2023-ம் ஆண்டிற்காக விருது பட்டியல் இதோ:

* சிறந்த படம் - மாமன்னன்

* சிறந்த நடிகர் - அஜித் குமார் (துணிவு)

* சிறந்த நடிகை - திரிஷா கிருஷ்ணன் (லியோ)

* சிறந்த ஒளிப்பதிவாளர் - மனோஜ் பரமஹம்சா (லியோ)

* சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (விடுதலை-1)

* சிறந்த திரைக்கதையாசிரியர் - நெல்சன், அல்ப்ரெட் பிரகாஷ் (ஜெயிலர்), விக்னேஷ் ராஜா (போர் தொழில்)

* சிறந்த தயாரிப்பாளர் - மில்லியன் டாலர் ஸ்டியோஸ், எம்.ஆர்.பி எனடர்டெயின்மென்ட்ஸ் (குட் நைட்)

* சிறந்த நடன இயக்குநர் - தினேஷ் மாஸ்டர் (லியோ)

* சிறந்த துணை நடிகர் - விக்ரம் (பொன்னியின் செல்வன் -2)

* சிறந்த துணை நடிகை - ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன் -2)

* சிறந்த எண்டர்டெயினர் - எஸ்.ஜே.சூர்யா (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்)

* சிறந்த வில்லன் - பகத் பாசில் (மாமன்னன்)

* சிறந்த எடிட்டர் - பிலோமின் ராஜ் (லியோ)

* சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (லியோ)

* சிறந்த கலை இயக்குநர் - மிலன் பெர்னாண்ட்ஸ் (துணிவு)

* சிறந்த விஎப்எக்ஸ் - அல்ஜாக்ரா ஸ்டூடியோ (பொன்னியின் செல்வன் 2)

* சிறந்த ஒலிக் கலவை - எஸ்.ஒய்.என்.சி சினிமாஸ் (லியோ)

* விமர்சன ரீதியா சிறந்த படம் - குட் நைட்

Read Entire Article