ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த நடிகர் மணிகண்டன்

1 month ago 7

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன். இவர் கதாநாயகனாக நடித்த 'குட் நைட்', 'லவ்வர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'குடும்பஸ்தன்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றன.

இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மணிகண்டன் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து நான் பெறும் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஒரு சிறிய திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடியதைக் கொண்டாடுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் சாதனையாகும். அதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி . ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை.

என் மீது நம்பிக்கை வைத்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல். இயக்குனர்களுக்கும், இந்த படங்கள் வெற்றிபெற உழைத்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னையும் என் நடிப்பையும் ஏற்றுக்கொண்ட அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்' என்று தெரிவித்திருக்கிறார்.

Heartfelt Thanks to Everyone ❤️ with Love and Gratitude - K.Manikandan pic.twitter.com/VqXOJC9Vj1

— Manikandan (@Manikabali87) March 22, 2025
Read Entire Article