யோகாவில் ஆந்திரா உலக சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி

12 hours ago 5

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். அவர் அமராவதியில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, ஆந்திரா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் வளர்ச்சிக்கான சரியான வேகத்தில் செல்கிறது என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, நாட்டின் முக்கிய நிகழ்ச்சியான ஜூன் 21-ஐ சர்வதேச யோகா நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்த ஆந்திர பிரதேசத்தின் முதல்-மந்திரி மற்றும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அந்த நாளில் ஆந்திர பிரதேசத்தில் நான் யோகா பயிற்சியை மேற்கொள்வேன். சர்வதேச யோகா தினத்தின் 10 ஆண்டுகால பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது. இந்த முறை ஒட்டுமொத்த உலகமும் ஆந்திராவை நோக்கி பார்க்கும் என்றார்.

தொடர்ந்து அவர், யோகாவுக்கான ஆர்வத்துடன் கூடிய சூழலை, அடுத்த 50 நாட்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். போட்டிகள் நடத்தப்பட வேண்டும். யோகாவில் உலக சாதனை ஒன்றை ஆந்திர பிரதேசம் படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதில் நீடித்த செயல்பாடு இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அவர்களுடன் தோளோடு தோள் நிற்பேன் என்றும் மக்களுக்கு ஈடு இணையற்ற ஆதரவை வழங்குவேன் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Read Entire Article