நாகர்கோவில்-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் இன்று 3 மணி நேரம் தாமதம் - தெற்கு ரெயில்வே தகவல்

13 hours ago 2

சென்னை,

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற 6 நாட்களிலும் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 'வந்தே பாரத்' ரெயில் 3 மணி நேரம் கால தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய 'வந்தே பாரத்' ரெயில், கால தாமதமாக மாலை 5.20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரெயில் தாமதமாக வருவதால், இந்த நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

முன்னதாக சென்னை-நாகர்கோவில் 'வந்தே பாரத்' ரெயிலில் வரும் 8-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி தற்போது 16 பெட்டிகளுடன் இயங்கி வரும் சென்னை-நாகர்கோவில் 'வந்தே பாரத்' ரெயில் 20 பெட்டிகளாக அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article