பணி விவரம்:
1. Administrative Officer (Scale-I) (Specialist): 100 இடங்கள்.
பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: Risk Management- 10, Finance and Investment- 20, Automobile Engineers-20, Chemical Engineers/ Mechatronics Engineers-10, Data Analytics-20, Legal-20. வயது: 30.09.2024 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மேற்குறிப்பிட்ட பாடங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance and Investment பிரிவுக்கு பி.காம்/எம்.காம் அல்லது சிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Administrative Officer (Scale-I) (Generalist): 100 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் 55% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் படித்து பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வே்ணடும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் வருகிற டிச.14ம் தேதி சென்னை, கோவை, தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். அதன்பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும்.www.uiic.co.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2024.
The post யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 200 அதிகாரிகள் appeared first on Dinakaran.