வயதான பெண்மணிக்கு புதிய முறையில் இதய அறுவை சிகிச்சை: கிண்டி அரசு மருத்துவமனை  சாதனை

2 hours ago 1

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய முறையில் இதய அறுவை சிகிச்சை செய்து வயதான பெண்மணிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 64 பெண்மணி சலிமா பேகம். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், இதயத்தில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் மகா தமனி வால்வு (அயோடா) மற்றும் மகா தமனி அடிப்பகுதி சுருங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவருடைய உடல் தன்மைக்கு ஏற்ற பெரிய வால்வு பொருத்துவதற்கு மகா தமனி அடிப்பகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து, செயற்கை வால்வு பொருத்தி, சுருக்கத்தை சீராக்க செயற்கை திசு சீரமைப்பு (போவைன் பெரிகார்டியல் பேட்ச் - Bovine Pericardial Patch) மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

Read Entire Article