
சென்னை ,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் அனைத்து திராவிட சகோதர சகோதரிகளுக்கும் எனது மகிழ்ச்சியான யுகாதி வாழ்த்துக்கள்.
இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்க வேண்டும். இந்த 'யுகாதி' ஒற்றுமையின் உணர்வை தூண்டட்டும் என தெரிவித்துள்ளார்.