சென்னை: “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. மேலும் அசாமில் யூரியா தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தது போல, தமிழகத்திலும் யூரியா மற்றும் மற்ற தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பை உருவாக்கும் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை, மேலும் விலைவாசி உயர்வு குறைப்பதைப் பற்றிய அறிவிப்பும் இல்லை.