திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினசாமி (52), பாஜ விவசாய அணி மாவட்ட தலைவர். மேலும் திருமங்கலம் நகரில் மதுரை ரோட்டில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோவுடன் கருத்து பதிவிட்டார். இப்பதிவு இருதரப்பினரிடம் மோதல் ஏற்படும் விதமாக இருப்பதாக, மறவன்குளம் விஏஓ துரைபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து ரத்தினசாமியை நேற்று கைது செய்தனர்.
The post மோதலை தூண்ட முயற்சித்த பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.