மோகன்லாலுடனான 33 வயது வித்தியாசம்...டிரோல்களுக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்

2 days ago 4

சென்னை,

நடிகை மாளவிகா மோகனன் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். விரைவில் பிரபாசின் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.

மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில், 'ஹிருதயபூர்வம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்து மாளவிகா மோகனன் தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் நடிக்கும் மோகன்லாலுக்கும் மாளவிகா மோகனனுக்கும் இடையே 33 வயது வித்தியாசம் இருப்பதால் இணையத்தில் பல டிரோல்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த டிரோல்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதன்படி, 30 வயது நடிகைக்கு ஜோடியாக 65 வயது நடிகர் நடிக்கிறார். இந்த மூத்த நடிகர்கள் தங்கள் வயதிற்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதற்கு என்ன காரணம்?' என்ற ரசிகரின் கேள்விக்கு மாளவிகா பதிலளித்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட பதிவில், "அப்படி உங்களுக்கு யார் சொன்னது?. அரைகுறையாக தெரிந்துகொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு நபரையோ, படத்தையோ மதிப்பிடுவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article