
திருவனந்தபுரம்,
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமுடிக் கட்டுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தார். அப்போது நடிகர் மம்மூட்டிக்காக அங்கு சிறப்பு பூஜையும் நடத்தினார். மோகன்லால் சபரிமலை செல்லும்போது அவரது ரசிகரான திருவல்லா காவல் ஆய்வாளர் சுனில் கிருஷ்ணா, அன்பின் மிகுதியால் தாமாக பாதுகாப்பிற்கு சென்றார்.
இந்நிலையில், பணியிடமாற்றம் என்ற செய்தி காவல் ஆய்வாளர் சுனில் கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. நடிகர் மோகன்லாலுடன் இவர் சபரிமலை சென்றதுதான் பணியிடமாற்றத்திற்கு காரணம் என்று தெரிகிறது. மேலும், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.