
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
"2025 ஆம் ஆண்டு மே மாதம் 11.05.2025 (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.