'ஜன நாயகன்' படத்தில் விஜய்யின் பெயர் இதுவா?

3 hours ago 2

சென்னை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று நடைவடைந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு 'தளபதி வெற்றி கொண்டான்' (TVK) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பெயர், வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாது, அவரது கட்சி (TVK) ரெபரன்ஸ் கொண்டதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. 

Read Entire Article