மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறப்பு - பட்டியலின மக்கள் வழிபாடு

1 day ago 1

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவிலைச் சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் ஏராளமான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் பட்டியலின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எஸ்.பி. சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Read Entire Article