
முஸ்தாபாபாத்,
டெல்லியின் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்தது. எனினும், கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி வடகிழக்கு மாவட்ட கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா கூறும்போது, தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் டெல்லி போலீசார் அடங்கிய குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
டெல்லி தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார். டெல்லியில் நேற்றிரவு திடீரென வானிலை மாறியது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.