இவானா நடிக்கும் 'சிங்கிள்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

9 hours ago 2

சென்னை,

நடிகர் ஸ்ரீ விஷ்ணு மற்றும் இளம் நடிகைகளான கெட்டிகா ஷர்மா மற்றும் இவானா ஆகியோர் நடித்து வரும் யூத் புல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் 'சிங்கிள்'. இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை கல்யா பிலிம்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினிடி, பானு பிரதாபா மற்றும் ரியாஸ் சௌதர் ஆகியோர் தயாரிக்கின்றனர். சீதாராமம் புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் 'சிர்ரகைந்தி' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. மேலும், அனைத்து சிங்கிள்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Dedicating to all the Frustrated Single Sinthakaayalu..!Let's shatter the speakers & shake off the frustration with #SirrakaindhiSingleBathuku!▶️ https://t.co/um7ZpMA8yE#SingleMovie May Release@sreevishnuoffl @TheKetikaSharma @i_ivana #AlluAravind @caarthickrajupic.twitter.com/rulh71hz3P

— Geetha Arts (@GeethaArts) April 17, 2025
Read Entire Article