மேலூர்மேலூர் அருகே இன்று காலை பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி அருகே உள்ளது வலைச்சேரிபட்டி கிராமம். இங்குள்ள உடையாண்டி கண்மாய் மூலம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயை சுற்றியுள்ள விளை நிலங்களில் விவசாய பணிகள் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில், இன்று காலை உடையாண்டி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் வலைச்சேரிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் ஒருசேர கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி கச்சா, ஊத்தா, வலை போன்ற உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்களை அள்ளிச்சென்றனர். மீன்பிடி திருவிழாவில் பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்வது வழக்கமில்லை. இதனால் கிராம மக்கள் தங்களது வீடுகளில் மீன்களை சமையல் செய்து ருசித்தனர். இதுபோன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
The post மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: கட்லா, கெண்டை மீன்களை அள்ளிச்சென்றனர் appeared first on Dinakaran.