நெடுவாசல் பகுதியில் 26ம் தேதி மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம்

3 hours ago 1

பெரம்பலூர்,ஏப்.24: பெரம்பலூர் அருகே நெடுவாசல் பகுதியில் நாளை மறுநாள் 26ஆம் தேதி அன்று மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் அதில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து, கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் (பிளாஸ்டிக்) நெகிழியை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை பயன் படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு முன்னிலை வகித்து வருகிறது. அதன்பொருட்டு அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற் கொண்டு, மஞ்சப்பை பயன் பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதன்தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டநிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி துறையினர் இணைந்து நாளை மறுநாள் 26ஆம்தேதி காலை 7 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் மாபெரும் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நெகிழிக் கழிவுப் பொருட்களை சேகரித்தல் மற்றும் நெகிழி குறித்த விழிப்புணர்வை பெற்று தம் அன்றாட வாழ்வில் நெகிழி புறக்கணிப்பை அங்கமாக்கி நெகிழி இல்லா தமிழகத்தை முன்னெடுத்து செல்வதில் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ளா அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post நெடுவாசல் பகுதியில் 26ம் தேதி மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article