பெரம்பலூர்,ஏப்.24: காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து வி.களத்தூரில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி.களத்தூரில், எஸ்டிபிஐ எனப்படும் சோஷியல் டெமாக்ரஸி பார்ட்டி ஆப் இண்டியா கட்சியின் சார்பில், காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் மெழுவர்த்தி ஏந்தி அமைதிக் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, எஸ்டிபிஐ கட்சியின் வி.களத்தூர் கிளை தலைவர் பக்கீர் முஹம்மது தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பாரூக் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பேசினார். நகரச்செயலாளர் இஸ்மாயில்,நகரபொருளாளர் நூர்முஹம்மது, மாவட்ட செயற் குழு உறுப்பினர் முஹம்மது, மில்லத் நகர் கிளை தலைவர் முஹம்மது ஜமீல், கிளை செயலாளர் முஜிப் ரஹ்மான், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஏராளமான எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி,அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியானதற்கு இரங்கல் தெரிவித்தனர். தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
The post காஷ்மீர் தாக்குதலை கண்டித்து வி.களத்தூரில் இரங்கல் கூட்டம் appeared first on Dinakaran.