மேலும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

1 day ago 2

சென்னை,

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், பவுனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது.

இந்த சூழலில், நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.9,020-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9,065-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

02.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,520 (இன்று)

01.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,160( நேற்று)

30.06.2025- ஒரு சவரன் ரூ. 71,320

29.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440

28.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440 

Read Entire Article