உரிமையாளர் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு கொடுப்பது குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

4 hours ago 3

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டை வாடகை அல்லது குத்தகை என்ற பெயரில் ஒப்பந்தத்தின் கீழ் உரிமையாளர்களிடமிருந்து பெற்று கொண்டு, பின்னர் அவர்கள் வேறு நபர்களிடம் பெரும் தொகையைப் பெற்று உரிமையாளருக்குத் தெரியாமல் அதை மூன்றாம் தரப்பினருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமையாளர்களை ஏமாற்றுகிறார்கள்.

எனவே உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் அந்த நபர்கள் தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article