மேற்கு வங்காளம்: வக்பு போராட்டத்தில் தந்தை-மகன் படுகொலை விவகாரம்; 2 பேர் கைது

1 month ago 7


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது.

வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு 3 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர்.

போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், போலீஸ் வாகனங்கள் 5 தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல் அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன. சிறை வேன் ஒன்று சூறையாடப்பட்டது. காவல் வாகனத்தின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Read Entire Article