மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை

1 week ago 4

கொல்கத்தா,

வக்பு திருத்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து, ஜனதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளது. வக்பு சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்க்கு வர உள்ளது .

இதற்கிடையே, மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது கற்களை வீசப்பட்டுள்ளன. வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Read Entire Article