
திருவனந்தபுரம்,
நடிகர் பிருத்விராஜ் தமிழில் 'கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் இயக்கி நடித்த 'எல் 2 எம்புரான்' படம் கடந்த மாதம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான கேரள அரசு சார்ப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். அந்த விழாவில், நடிகர் பிருத்விராஜுக்கு 'ஆடு ஜீவிதம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர் : பிளஸ்ஸி (ஆடு ஜீவிதம்)
சிறந்த நடிகை : ஊர்வசி (உள்ளொழுக்கு), பீனா சந்திரன் (தடவு)
சிறந்த கதை : காதல் - தி கோர்
சிறந்த அறிமுக நடிகர் : பாசில் ரசாக் (தடவு)
சிறந்த பெண் பின்னணிப் பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
சிறந்த திரைப்படம் : ஆட்டம்
சிறந்த குழந்தை நடிகர் : ஸ்ரீபத் யான் (மாளிகப்புரம்)