பார்டர் - கவாஸ்கர் கோப்பை தோல்வி எதிரொலி: இந்திய பயிற்சியாளர்கள் நீக்கம்..?

1 day ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. மேலும் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மாற்றங்கள் நிகழலாம் என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதால் இந்த குழுவே அப்படியே தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் மற்றும் சோஹம் தேசாய் ஆகியோர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article