
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.