மேட்டூர் நீர்மட்டம் 108.68 அடி

5 hours ago 1

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 8,500 கனஅடியாக சரிந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8,355 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,545 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 1,000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 108.32 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 108.68 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 76.54 டிஎம்சி.

The post மேட்டூர் நீர்மட்டம் 108.68 அடி appeared first on Dinakaran.

Read Entire Article