சிறுத்தை தாக்கி ஒரு ஆடு, 3 குட்டிகள் பலி கிராம மக்கள் பீதி குடியாத்தம் அருகே படம் உள்ளது

3 hours ago 1

குடியாத்தம், பிப். 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி குப்பம், பேரணாம்பட்டு, உள்ளிட்ட வனபகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கே.வி குப்பம் அருகே சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார். தொடர்ந்து சிறுத்தை தாக்கியதில் ஆடு, மாடுகள் உள்ளிட்டவை பலியாகி வந்தது. கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் குறைந்து இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ச்சலுக்குச் சென்ற போது சிறுத்தை தாக்கியதில் பலியானது. நேற்று குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் அங்கிருந்த 1 ஆடு மற்றும் 3 குட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் வான்கோழி மற்றும் நாய் குட்டிகளையும் சிறுத்தை கடித்துத் குதறி உள்ளது. தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

The post சிறுத்தை தாக்கி ஒரு ஆடு, 3 குட்டிகள் பலி கிராம மக்கள் பீதி குடியாத்தம் அருகே படம் உள்ளது appeared first on Dinakaran.

Read Entire Article