டயர் வெடித்து வேன் கவிழ்ந்து சாலையில் சிதறிய மீன்கள் போட்டி போட்டு அள்ளியவர்கள் மீது போலீஸ் தடியடி பள்ளிகொண்டா அருகே பரபரப்பு

2 hours ago 1

பள்ளிகொண்டா, பிப்.7: பள்ளிகொண்டா அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதனால் வேனில் ஏற்றி வந்த மீன்கள் சாலையில் சிதறியது. இதை எடுக்க வந்தவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சுமார் 2 டன் மீன்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மினி வேன் புறப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டம் பள்ளிெகாண்டா அடுத்த அகரம்சேரி அருகே நேற்று காலை 10 மணிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய வேன், கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் ேமாதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் கொண்டு வரப்பட்ட மீன்கள் சாலையில் சிதறியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து போட்டி போட்டி மீன்களை அள்ளினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார், சாலையில் மீன்களை அள்ளியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான வேனில் சிக்கி காயம் அடைந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த டிரைவர் நடராஜன்(28) என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் சிதறிய மீன்களை சேகரித்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post டயர் வெடித்து வேன் கவிழ்ந்து சாலையில் சிதறிய மீன்கள் போட்டி போட்டு அள்ளியவர்கள் மீது போலீஸ் தடியடி பள்ளிகொண்டா அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article