மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 14,000 கனஅடியாக சரிந்தது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 17,596 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 15,531 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 89.92 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 90.87 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 53.65 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணையில் 800 கனஅடியாக நீர்திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.