சென்ட்ரல் வங்கியில் 266 இடங்கள்

2 hours ago 2

சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு பணிக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Management Grade.
மொத்த காலியிடங்கள்: 266.
சம்பளம்: ரூ.48,480- 85,920.
வயது: 30.11.2024 தேதியின்படி 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது ஒரு வருடம் முதல் 3 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மார்ச் 2025ல் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு ரூ.175 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்தவும்.
www.ibpsonline.ibps.in என்ற இணையதளம் வழியாக ஆனன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.centralbankofindia.co.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2025.

The post சென்ட்ரல் வங்கியில் 266 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article